குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் ஆகியவை உருவத்தில் சிறியதாக உள்ள தானிய வகைகளாக இருப்பதால், அவைகளை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். இவை அனைத்தும் மிகக்குறுகிய காலத்தில் சாதாரண மண்ணிலும், வறட்சி காலத்திலும் கூட வளரக்கூடியவை. மேலும், சிறுதானியங்கள் பயிரிட செலவினங்கள் மிகக் குறைவு. சிறுதானியங்களில், வரகு பயிர் குறைந்த நீர்வளம் மற்றும் மண் வளம் உள்ள இடங்களில் செழித்து வளரக்கூடியது. அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், அதாவது ஆடி பட்டங்களில் விதைக்கலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.