பசுந்தீவனங்களை தரையில் போடாமல், கயிற்றில் கட்டாமல் இரண்டு அடி உயரத்தில் மரப் பெட்டியில் வைத்துக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் வெள்ளாட்டின் சாணமோ, சிறுநீரோ பசுந்தீவனத்தில் பட்டு விட்டால் அவற்றை ஆடுகள் உண்ணாது. ஒரே வகையான மர இலைகளை உண்ணாது. எனவே மர இலைகளை மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும். மேலும் பசும் புற்களை சிறுசிறு துண்டுகளாக கத்திரி கொண்டோ அல்லது இயந்திரம் மூலமோ நறுக்கி தீவனதொட்டியில் வைத்துக் கொடுத்தால் பசுந்தீவனங்கள் வீணாவதை தவிர்க்கலாம். புற்களையும் அடர்தீவனத்தையும் தனித்தனியாக தீவனத் தொட்டியில் இடவேண்டும். தினமும் தீவனத்தை 2-3 வேளை கொடுக்க வேண்டும். உலர் தீவனத்தை தனியாக கொடுக்காமல் பசுந்தீவனத்துடன் கலந்து கொடுக்க வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.