பசுக்களுக்கு தீவனம் அளிக்கும் முறைகள் 

பசு மாடுகளுக்கு எந்த வகையான தீவனங்களை அளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் மாடுகளின் நோய் எதிர்ப்புத்திறன் மற்றும் பால் கறவைத்திறனை அதிகரிக்கலாம். மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து ஆகிய மூன்று சத்துக்களும் தீவனத்தில் அவசியம் இருக்க வேண்டும். 33% பிண்ணாக்கு 33% தானியம் 33% தவிடு  1% தாது உப்பு மற்றும் கல் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலப்பு தீவனமாக பசுவிற்கு கொடுக்க வேண்டும். உதாரணமாக நாள் ஒன்றிற்கு 10 லிட்டர் பால் கறவைத் திறன் கொண்ட பசுவிற்கு வேளைக்கு 2kg கலப்பு தீவனம் வீதம் காலை மற்றும் மாலை வேளைகளில் கொடுக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 15kg பசுந்தீவனமும்,  8kg உலர்தீவனமும் அதாவது  வைக்கோல் அளிப்பதன் மூலம் மாடுகள் நோய்த் தாக்குதல் இன்றி ஆரோக்கியமான பால் கறவையுடன் காணப்படும்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags
Get In Touch

Reliance Corporate Park 5 TTC Industrial Area,

Thane-Belapur Road, Ghansoli,

Navi Mumbai - 400701, Maharashtra

Follow Us

Kisan Grow

Machli

Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.