நெல் மணிகள் திரட்சியாக வர நெல் தண்டு உருண்டு கதிர் வரும்போது புளித்த மோர் 5 லிட்டர், இளநீர் 5 லிட்டர், 1 லிட்டர் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒரு பானையில் ஊற்றி துணியால் கட்டி 3 முதல் 5 நாட்கள் வைத்திருந்து அதனை கரைத்து சுத்தமான துணியால் வடிகட்டி அந்த கரைசலை கதிர் வெளிவரும் நேரத்தில் இந்த கரைசலை 200 லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்கள் முழுமையாக நனையுமாறு தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் நெல் பயிரில் இயற்கையான முறையில் பூக்கள் அதிகரித்து மணிகள் திரட்சியாகவும், நெல் மணிகள் பொன்நிறமாகவும் வரும். மேலும் தகவலுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி எண் 1800 419 8800 ஐ தொடர்பு கொள்ளவும். நன்றி.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.