அதிக பால் கறக்கும் கறவை மாடுகளில் சுகாதாரமின்மை காரணமாக, பாக்டீரியா உள்ளிட்ட நோய்க்கிருமிகளின் தொற்றால் மடிவீக்கம் ஏற்படுகிறது. இந்நோய் தாக்கிய மாடுகளின் மடியானது வீக்கமாகவும் கடினத் தன்மையுடனும் வெப்பம் அதிகரித்தும் காணப்படும். இதற்கு தீர்வாக பின்வரும் மரபுவழி மருத்துவ முறையை கறவைமாடு வளர்ப்போர் பின்பற்றலாம். சோற்றுக்கற்றாழை- 250 கிராம் (ஒருமுழம் தோல் நீக்காமல்), மஞ்சள்தூள்- 50 கிராம் (இரண்டு கைப்பிடி அளவு), சுண்ணாம்பு-15 கிராம் (ஒருகொட்டைப்பாக்கு அளவு) ஆகிய பொருட்களை ஒன்றாக அரைத்து, அரைத்த விழுதில் ஒரு கையளவு எடுத்து, அதனுடன் ஓர் டம்ளர் தண்ணீர் சேர்த்து மாடுகளின் மடியில் நன்கு தடவ வேண்டும். இச்சிகிச்சையை 3-5 நாட்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் மருந்து கலவையை புதிதாக அரைத்து பயன்படுத்த வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.