தொழுஉரம், டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் வெப்பம் புண்ணாக்கு கலந்து ஏழு நாட்கள் மூடி வைத்து பின் அடியுரமாக வீட்டுக் காய்கறித் தோட்டத்தில் இட வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்கப்பட்ட செடிகளின் கிளைகளை சேகரித்தும், நோயுற்ற செடிகளை பிடிங்கி அழிக்கவும். மஞ்சள் மற்றும் நீல வண்ண ஒட்டும் அட்டைகளை வைக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகளான காய்துளைப்பான், அசுவினி, மாவு பூச்சிகளை எடுத்து அழிக்க வேண்டும். பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பின், வேப்பெண்ணெய் தெளிப்பு லிட்டருக்கு 4 மி.லி அல்லது வேப்பங்கொட்டை சாறு 3 % என்ற அளவில் அளிக்க வேண்டும். நோய் பாதிப்பு அதிகம் இருக்குமெனில், பேசில்லஸ் சப்ட்லிஸ் 5 கிராம் ஒரு லிட்டருக்கு கலந்து தெளிக்கவும். நச்சு மருந்துகள் தெளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் வீட்டுக் காய்கறித் தோட்டம் குறித்த சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற 1800 419 8800 என்ற ரிலையன்ஸ் அறக்கட்டளையின் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||