வறட்சியை எதிர்த்து போராட நெற்பயிரில் ஏக்கருக்கு 250 முதல் 400 மில்லி PPFM பாக்டீரியாவை 200 லிட்டர் தண்ணீரில் அல்லது 2 முதல் 3 கிலோ பொட்டாசியம் குளோரைடு மருந்தினை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் அல்லது பேட்டரி கைத்தெளிப்பான் மூலம் நன்கு நனையும் படி தெளிக்கவும். இதனால் பயிர்கள் 15 முதல் 20 நாட்களுக்கு வறட்சியைத் தாங்கிப் பயிர் பசுமையாக இருக்கும். மீண்டும் மழை பெய்கையில் தழைக்கும். இதனை 30 முதல் 45 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தவும். இதனைத் தெளிக்கும்போது பூச்சிக்கொல்லி அல்லது பூஞ்சணக்கொல்லிகளுடன் கலந்து தெளிக்கக் கூடாது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு அல்லது பின்பு இந்நுண்ணுயிர் திரவத்தைத் தெளிக்க வேண்டும். எனவே, விவசாயிகள் பிபிஎப்எம் என்ற நுண்ணுயிரி கரைசலோ அல்லது பொட்டாசியம் குளோரைடு மருந்தினை தெளித்து வறட்சியிலிருந்து நெற்பயிர்களை பாதுகாக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.