விவசாயிகள் விரும்பி பயிரிடும் நெல் இரகங்களின் விதைகளும் பழைய நெல் இரகங்களுக்கு மாற்றாக உயர் விளைச்சல் தரக்கூடிய பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் மற்றும் தாங்கும்திறன் உடைய புதிய நெல் இரகங்களை விவசாயிகளிடையே அறிமுகம் செய்து பரவாலாக்கம் செய்யும் வகையில் ஆடுதுறை 51, ஆடுதுறை 54 ஆகிய நெல் இரகங்களின் விதைகளும் போதுமானளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆடுதுறை 51 நெல் இரகமானது முன்-சம்பா பருவத்திற்கேற்ற நீண்ட கால நடுத்தர சன்ன ரகம் ஆகும். நீண்டகால நெல் ரக வரிசையில் சி.ஆர் 1009-க்கு மாற்று இரகத்திற்கான தேவையை நிறைவு செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. 155 - 160 நாட்கள் வயதுடையது. ஏக்கருக்கு சராசரியாக 2640 கிலோ மகசூல் கிடைக்க கூடியது. இலைமடக்கு புழு, தண்டு துளைப்பான் மற்றும் குலைநோய்க்கு எதிர்ப்புதிறனும் புகையான், இலையுறை அழுகல் மற்றும் இலையுறை கருகல் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத்திறனும் கொண்டது. நடுத்தர சன்ன இரகம். மேலும் சி.ஆர் 1009-க்கு இணையான சமையல் பண்புகளைக் கொண்டது. ஆடுதுறை 54 நெல் இரகமானது சம்பா பருவத்திற்கேற்ற மத்திய கால நடுத்தர சன்ன இரகம் ஆகும். 130 - 135 நாட்கள் வயதுடையது. ஏக்கருக்கு சராசரியாக 2550 கிலோ மகசூல் கிடைக்க கூடியது. தண்டு துளைப்பான் மற்றும் குலைநோய் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. வெள்ளை பொன்னிக்கு இணையான சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டது.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.