பொதுவாக அந்த பகுதிகள் வளர்க்க கூடிய ஆடுகளை தேர்வு செய்து 5 முதல் 6 மாத குட்டிகள வாங்கி வளர்க்கலாம். ஆடு வளர்ப்புக்கு குறைவான இடம் போதுமானது. தீவனம் மற்றும் பராமரிப்பு செலவும் மிக குறைவு. குட்டி ஈன்ற ஆடுகளை வாங்குவதாக இருந்தால் இரண்டு ஈத்துக்கு மேல் ஈன்ற ஆடுகளை தவிர்க்க வேண்டும். தினமும் ஆடுகளுக்கு 100 கிராம் கடலை புண்ணாக்கு மற்றும் தீவன நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து வைக்க வேண்டும். ஆடுகளுக்கு தீவனமாக அனைத்து பச்சை இலைகளையும் கொடுக்கலாம். மேலும் வீட்டை சுற்றி பசுந்தீவன பயிர்களை வளர்க்கலாம். ஆடுகளுக்கு முதலில் குடல் புழு நீக்க மருந்தினை கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஆடுகளின் வளர்ச்சி சரியாக காணப்படும். மேலும், ஆண்டுக்கு ஒரு முறை பிபிஆர் நோய் மற்றும் துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசிகளை போட்டு கொள்ள வேண்டும்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.