கடலில் சூறாவளி காற்று, மற்றும் ஆபத்தான காலங்களிலிருந்து மீண்டு வர படகுகளில் உள்ள நபர்களின் எண்ணிக்கையில் லைப் ஜாக்கெட் (Life Jacket) வைத்திருக்க வேண்டும். குறைந்தது 6 நபர்கள் செல்லும் படகுகளில் 6 லைப் ஜாக்கெட் (Life Jacket) கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். கடலில் நீச்சல் தெரியாத நிலையில் 36 மணி நேரம் நீரில் மிதக்கும் தன்மை கொண்டது. இந்த லைஃப் ஜாக்கெட்டின் நிறம் அனைவருக்கும் எளிதில் தெரியக்கூடிய நிறம். இரவு நேரங்களில் இந்த லைஃப் ஜாக்கெட்டில் உள்ள ரெப்லெக்டிங் ஸ்டிக்கர் மூலமாக மற்ற படகுகளில் ஒளி பட்டு லைட் ஒளிரும். இதன் காரணமாக படகுகள் நம்மை நோக்கி உதவிக்கு வருவார்கள். மேலும், கட்டுமர படகில் குறைந்தது ஒரு லைப் பாய் (life buoy) இருக்க வேண்டும். இந்த லைப் பாய் (life buoy) 48 முதல் 72 மணி நேரம் நீரில் மிதக்கும் தன்மை கொண்டது. கடலில் ஆபத்து காலங்களில் கடலில் ஒருவர் இந்த லைப் பை (life buoy)அணிந்து கொண்டால் மற்றவர்கள் இந்த லைப் பாய்யை (life buoy) சுற்றி உள்ள கயிறுகளை பிடித்துக் கொண்டு நீரில் மிதக்கலாம். மேலும் பெரிய வகை கப்பல்களில் 4 முதல் 6 லைப்பை (life buoy) இருக்க வேண்டும். ஆபத்தான காலங்களில் ஒரு மருந்து பெட்டகம் மற்றும் ஒரு டார்ச்லைட் படகுகளில் இருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி எண் 1800 419 8800 ஐ தொடர்பு கொள்ளவும். நன்றி.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.