சம்பா நெல் சாகுபடியில் அடியுரம் இடுவது 

சம்பா நெல் சாகுபடியின் போது நடவுவயலில் ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கியதொழுஉரத்தை இடவேண்டும் (அல்லது) 2.5 டன் பசுந்தாள் உரத்தை 15 செ.மீ ஆழத்திற்கு மடக்கி உழுது 7 நாட்கள் வரை விட வேண்டும். நிலத்தை மூன்று முறை, நான்கு நாட்கள் இடைவெளியில் நன்றாக சேற்றுழுவு செய்யவேண்டும். பின்னர் 3 முதல் 5 செ.மீ உயரத்திற்கு நீர் தேக்கி வைக்கவேண்டும். களிமண் நிலமாக இருந்தால் 10 செ.மீ ஆழம்வரை நன்றாக உழவேண்டும். இறுதியாக நிலத்தை நன்றாக சமன்படுத்த வேண்டும்.மேலும் அடியுரமாக ஒரு ஏக்கருக்கு்க 30 கிலோ யூரியா , 40 கிலோ டிஏபி அல்லது 120 கிலோ சூப்பர் பாஸ்பேட், 15 கிலோ பொட்டாஷ் மற்றும் 200 கிலோ ஜிப்சம் இடவேண்டும்.நடவு செய்யும் நாளன்று நடுவதர்க்கு முன் 10 கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 2 கிலோ நுண்ணூட்ட உரத்தினை இடவேண்டும்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags
Get In Touch

Reliance Corporate Park 5 TTC Industrial Area,

Thane-Belapur Road, Ghansoli,

Navi Mumbai - 400701, Maharashtra

Follow Us

Kisan Grow

Machli

Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.