நிலக்கடலை சாகுபடியில் துவரை, தட்டைப்பயிர், சூரியகாந்தி, எள், மற்றும் உளுந்து ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம். நிலக்கடலை எள் அல்லது நிலக்கடலைஉளுந்து 4 க்கு 1 என்ற விகிதத்தில் அல்லது நிலக்கடலை தட்டப்பயிர் 6 க்கு 1 விகிதத்திலும் நிலக்கடலை சூரியகாந்தி 6 க்கு 2 விகிதத்திலும் உயர்த்தப்படலாம். ஒவ்வொரு ஐந்து வரிசை நிலக்கடலைக்கும் ஒரு வரிசை தட்டைப்பயிர் அல்லது ஆமணக்கு ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் சிவப்பு கம்பளிப்பூச்சி மற்றும் புரோட்டோனியா புழு தாக்கத்தை குறைக்கலாம். வேலிபயிராக கம்பை பயிரிடுவதால் வெள்ளை ஈ மற்றும் ஒரு சில அந்த பூச்சிகள் மற்ற வயலில் இருந்து வருவது தடுக்கப்படுகிறது.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.