நெல் சாகுபடியில் இலைப்பேனை கண்டறியும் முறை

இலைப்பேன் பாதிப்பை நாற்றங்காலிலே கண்டறிய முடியும். இது நடவு வயலை விட நாற்றங்காலில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இப்பேன்கள் இலையின் மேலுள்ள சாற்றை உறிஞ்சி கருப்பு நிறமாக மாற்றும். இதனால் இலை எரிந்து போனது போல் காணப்படும். இப்பூச்சிகள் பெரிதாக வளர்ந்த பின் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் இவை நாற்றங்காலிலே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இப்பேன்கள் நடவு வயலில் சிறிது காலம் மட்டுமே இருக்கும்.அதாவது 15 முதல் 20 நாட்களுக்கு மேல் இருக்காது. இது இலைப்பேன் பாதிப்பு தானா என தெரிந்துகொள்ள உள்ளங்கையை சுத்தமான நீரில் நனைத்து கொண்டு பத்து இடங்களில் பத்து முறை நாற்று மற்றும் நடவு வயல்களில் மேல் கைகளை வீசவும் இதை செய்த பின்பு கைகளில் இளம் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் அறுபத்திற்கும் மேற்பட்ட பேன்கள் இருக்குமாயின் பாதிப்பு அதிக அளவு இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags