நெல் சாகுபடியில் களைகளுக்கு அடுத்தபடி பாசிகள் அதிக மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும். நெல் வயலில் பச்சை பாசி அடர்ந்த படலம் போல் வளர்ந்து போர்வை போல் காணப்படும். நெற்பயிரின் வேர்ப்பகுதியில் காற்றோட்டத்தை மட்டுப்படுவத்தினால் வேர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு சத்துக்கள் எடுத்துக்கொள்ளாத நிலை உண்டாவதால் நெற்பயிர்கள் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். இதனை கட்டுப்படுத்த பாசி அதிகம் படர்ந்துள்ள வயல்களில் கோனோவீடர், ரோட்டரி வீடர் போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி களையுடன் பாசிகளை நிலத்தில் மடக்கி உழ வேண்டும். ஏக்கருக்கு 1.0 கிலோ காப்பர் சல்பேட் (மயில் துத்தம்) என்ற அளவில் 10 கிலோ மணலுடன் கலந்து நெல் வயலின் வாய்மடையில் சாக்குப்பையில் இட்டு நீர் பாசனம் செய்ய வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.