மக்காச்சோளம் படைப்புழுவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த முதலில் அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு உழுவு செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பெவேரியா பேசியானா கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 5-8 என்ற எண்ணிக்கை வயலில் வைக்க வேண்டும். மாலை 6-8 மணி வரை விளக்கு பொறி ஏக்கருக்கு ஒன்று வைக்க வேண்டும். பொறிப்பயிர் அல்லது கவர்ச்சி பயிராக கம்பு, தட்டைப்பயறு, சோளம், செண்டுமல்லி, எள் போன்றவை விதைப்பு செய்யலாம். புழுவை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்த 1500 பிபிஎம் கொண்ட வேம்பு எண்ணெய் அசாடிராக்டின் 2 மில்லி / லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து தெளிப்பு செய்யலாம். முட்டை ஒட்டுண்ணி டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் 2 cc அளவு கட்ட வேண்டும். மெட்டாரைசியம் அனிசோபிலே ஒரு கிலோ / ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பு செய்யலாம். நச்சுத்தீனி தயார் செய்து வயலில் மாலை நேரங்களில் ஆங்காங்கே வைத்தால் பெரிய புழு சாப்பிட்டு இறந்துவிடும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||