நிலக்கடலையில் அசுவினி பூச்சியானது, இலைகள் மற்றும் குருத்துக்களின் அடிப்பகுதியில் இருந்து சாறை உறிஞ்சுவதால், செடியின் வளர்ச்சிக் குன்றி காணப்படும். மேலும், கரும்பூஞ்சானம் இலையின் மீது படிந்து ஒளிச்சேர்க்கையை தடை செய்கிறது. அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஓட்டும் பொறி 5 என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு வைக்கவும். தாக்குதலின் ஆரம்ப நிலையில் வேப்பங்கொட்டை சாறு 5 சதம் அல்லது அசாடிராக்டின் 300 மி.லி அல்லது வெர்ட்டிசிலியம் லெக்காணி 1 கிலோ என்ற அளவில் தெளிக்கவும். தாக்குதல் அதிகமாக தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு இமிடாகுளோஃபிரிட் 17.8 SL 65 மில்லியை 100 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.