கோழிகளைத் தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது. இந்த நோய் கோழிகளை கோடைகால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின் போது அதிகமாக பாதிக்கும். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது. தண்ணீர் குடிக்காது. வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும். வெள்ளைக் கழிச்சல் நோய் வராமல் தடுக்க குஞ்சு பொரித்த 7 நாட்களில் இருந்து 10 நாட்களுக்குள் RDVF அல்லது Lasota என்ற தடுப்பூசியை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் கண்ணிலோ அல்லது மூக்கு துவாரதத்திலோ விட வேண்டும். இந்த மருந்தை கலந்த ஒன்றரை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இந்த தடுப்பு மருந்து 2 மாதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||