நெல் சாகுபடியில் தேவைக்கேற்ப உரம் இடுவதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை குறைத்து நல்ல மகசூல் பெறலாம். மேலும் மழை நேரங்களில் தழைச்சத்து உரங்களை பாதி அளவில் இட வேண்டும். நெல் சாகுபடியில் டிஏபி, யூரியா உரத்தை அதிக அளவில் இடுவதால் நிலத்தில் நச்சு தன்மை அதிகரித்து, நெல் வயலில் பச்சை பாசி வளர்ச்சி அதிகரித்து, பயிர் வளர்ச்சி குறைந்து காணப்படும். எனவே தேவைக்கு ஏற்ப யூரியா உரத்தை இடவேண்டும். நெல் சாகுபடியில் மத்திய மற்றும் நீண்ட கால ரகங்களுக்கு ஒரு ஹெக்டருக்கு 125 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும். இந்த உரங்களுடன் ஜிங்க் சல்பேட் உரத்தை இடுவதால் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையை குறைக்கலாம். இந்த உரங்களில் பாதி தழைசத்து உரத்தையும், முழு மணி சத்து உரத்தையும், பாதி சாம்பல் சத்து உரத்தினையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள பாதி சாம்பல் சத்து உரத்தை நெற்பயிர் பூக்கும் பருவத்தில் இட வேண்டும். மீதமுள்ள பாதி தழைசத்து உரத்தை 2 பிரித்து நெற்பயிர் தூர் கட்டும் மற்றும் தண்டு உருளும் பருவத்தில் இடுவதால் நெற்பயிரில் நல்ல மகசூல் கிடைக்கும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||