வடகிழக்கு பருவமழை காலத்தில் பயிர்களை பயிரிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட நோயற்ற தரமான விதைகளை வாங்கவும். விதைகளை விதைப்பதற்கு ஒரு நாள் முன்பாக ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பேசில்லஸ் துகள்களை கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இதனால் விதைகளின் முளைப்புத்திறன் மற்றும் வீரிய தன்மை அதிகரிக்கும். மேலும் விதைகள் மூலம் பரவக்கூடிய நோய் கிருமிகள் அழிக்கப்படும். அடியுரமாக 1 ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம், 10 கிலோ ஜிங் சல்பேட், 15 கிலோ யூரியா, 40 கிலோ டிஏபி மற்றும் 10 கிலோ பொட்டாசியம் ஆகிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||