எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது இழப்பீடு பெற விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் நெல் சிறப்பு பருவம், உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோளம் 3, நெல் 3 ஆகிய வேளாண் பயிர்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் வெண்டை பயிர்களும் இத்திட்டத்தில் அறிக்கை செய்யப்பட்டுள்ளது. காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேசிய பயிர் காப்பீடு இணையத்தளத்தில் உள்ள விவசாயிகள் முனையத்தில் நேரடியாக காப்பீடு செய்யலாம். நடப்பு ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் நிறுவனம் மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் பூர்த்தி செய்து கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பத்துடன், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பதிவு செய்யும் பரப்பிற்கான கட்டணத்தொகையை செலுத்த வேண்டும். காப்பீடு ஆவணங்கள் மற்றும் இரசீதை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அவர்கள் தெரிவிக்கிறார்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.