பயிர் சாகுபடி செய்வதற்கு முன்போ, அல்லது கோடை காலத்தில் பயிர் இல்லாத தருனத்தில் மண் மாதிரி சேகரிப்பு செய்வது சிறந்தது. எரு குவிக்கப்பட்ட இடம், வரப்பு ஓரம், மரத்தின் நிழல், நடைபாதி, மற்றும் நீர் தேங்கும் இடங்களில் மண் மாதிரி சேகரிப்பதை தவிர்க்க வேண்டும். மண் மாதிரி எடுக்கும்போது நிலத்தின் மேல் பரப்பில் உள்ள முந்தைய பயிர்களின் சருகுகளை அப்புறப்படுத்த வேண்டும். பூண்டுகள் இருந்தால் மேல் மண்ணை சுரண்டாமல் அப்புறப்படுத்த வேண்டும். ஒரு வயலில் எடுக்கும் மண் மாதிரி அந்த மொத்த வயலின் தன்மையை காட்டுவதாலும் மண்ணின் வளம் இடத்திற்கு இடம் வேறுபடுவதாலும் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 10 இடத்தில் மண் எடுக்க வேண்டும். ஆங்கில எழுத்தில் V வடிவத்தில் குழியை 22.5 செமீ ஆழத்திற்கு வெட்டி எடுக்க வேண்டும். குழியின் இருபக்கத்திலும் ஒரு அங்குலம் கனத்திற்கு மேலிருந்து கீழாக மண்ணை சுரண்டி எடுக்க வேண்டும். வயலில் சேகரித்த மண் ஈரமாக இருந்தால் நிழலில் உளர்த்த வேண்டும். அவற்றை சுத்தமான சிமெண்ட் தரையில் கொட்டி சருகுகல் குச்சிகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண்ணை 4 பாகங்களாக பிரித்து எதிர் எதிர் பாகங்களை நீக்கிவிட்டு மீதம் உள்ள இரண்டு பாகங்களையும் ஒன்று சேர்த்து 4 பாகங்களாக பிரிக்க வேண்டும். இவ்வாறு அரை கிலோ மண் வரும் வரை செய்ய வேண்டும். இவ்வாறு சேகரிக்க்ப்பட்ட மண்ணை ஒரு துணிப்பை அல்லது பிளாஸ்டிக் பையில் இட்டு மண் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.