மானாவாரி நெல் சாகுபடியில் வறட்சியை தாங்கி வளரும் அண்ணா 4, CO 51, ADT 45 மற்றும் CO 53 போன்ற ரகங்களை விதைக்கலாம். தரமான விதைகளை விதைப்பதற்கு ஒரு நாள் முன்பாக ஒரு சதவிகித பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 6 மணி நேரம் ஊற வைத்து பின் நிழலில் 16 மணி நேரம் உலரவிட்டு விதைப்பை மேற்கொள்ளும்பொழுது விதை நெல் கடினத்தன்மையுடன் போதுமான ஈரம் மண்ணில் கிடைத்த பின்பு முளைத்து வளரும் தன்மையை பெறும். இவ்விதை கடினப்படுத்துதல் மூலம் சீரான முளைப்புத் திறனையும் வளர்ச்சியையும் இளம் நாற்றுக்கள் பெறுவதோடு வீரிய நாற்றுகளாக உருவெடுக்கும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.