விதைப்புக்கென சேமித்து வைத்திருக்கும் விதைகளில் வீரியம் குறைந்த விதைகளை பிரித்து எடுக்க ஒரு பிளாஸ்டிக் வாளியில் 10 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு கோழி முட்டையை போடவும். முட்டை நல்ல எடையுடன் இருப்பதால் தண்ணீரில் மூழ்கிவிடும். பின்பு சாதாரண சமையல் உப்பை சிறிது சிறிதாகப் போட்டு கரைக்க வேண்டும். உப்பு கரைந்து நீரின் அடர்த்தி அதிகமாவதால் முட்டை மேலே மிதந்து வரும். முட்டையின் மேற்பகுதி 25 பைசா அளவுக்கு தண்ணீரின் மேல் தெரியும் போது தண்ணீரில் உப்புபோடுவதை நிறுத்தி நெல் விதையை சிறிது சிறிதாகப் போட வேண்டும். அப்போது எடை குறைந்த நெல் விதைகள் மிதக்கும். தரமான விதைகள் கரைசலில் மூழ்கும். மிதக்கும் விதைகளை முற்றிலும் நீக்கி விட வேண்டும். மூழ்கிய விதைகளையே விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும். மூழ்கிய விதைகளை வெளியே எடுத்து இரண்டு அல்லது மூன்று முறை நீரில் கழுவி விதைகளின் மேல் படர்ந்த உப்பை நீக்கி நிழலில் உலர்த்தி விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||