மாட்டுக்கொட்டகையின் தரைப்பகுதியில் ஏற்படும் ஈரத்தன்மை காரணமாக கால்நடைகளை குளம்பு சிதைவு நோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. இது எல்லா வயது கால்நடைகளையும் பாதித்தாலும், வயது முதிர்ந்த மாடுகளில் பாதிப்பு அதிகம் காணப்படும். சுத்தமில்லாத தொழுவத்தில் உள்ள ஈரமான சாணம், சேறு மற்றும் காலில் உள்ள புண்கள் ஆகிவைகளில் பாக்டீரியாக்கள் நன்கு தங்கி வளரும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கால் குளம்புகள் மட்டுமே பாதிக்கப்பட்டு, திடீரென கால் முடங்கிவிடும். எனவே குளம்புகளை அவ்வப்போது கவனித்து சுத்தம் செய்து சீவி விடவேண்டும். தொழுவத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.