முத்து: நேரடி நெல் சாகுபடியில எவ்வளுவு உரம் போட்டாலும் உரச்செலவுதா அதிகமாகுதே தவிர அதிக மகசூல் வரலைங்கனா, உர மேலாண்மை பற்றிய சொல்லுங்க அண்ணே?
ராஜா: நேரடி நெல் சாகுபடியில விதைப்பிற்கு முன்னதாகக் கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் இட வேண்டும். மண் பரிசோதனை ஆய்வு முடிவின் படி இரசாயன உரம் இட வேண்டும்.
முத்து: மண் பரிசோதனை செய்யாத நிலையில என்ன உரம் இடலாம் சொல்லுங்க அண்ணே?
ராஜா: மண் பரிசோதனை செய்யாத நிலையில் பொதுப் பரிந்துரையாக ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்தும், 24 கிலோ மணிச்சத்தும், 24 கிலோ சாம்பல் சத்தும் இடலாம். பரிந்துரைக்கப்படும் அளவில் முழு அளவு மணிச்சத்தினையும், பாதியளவு சாம்பல் சத்தினையும் அடியுரமாக இட வேண்டும். நேரடி நெல் விதைப்பில் அடியுரமாகத் தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
முத்து: நேரடி நெல் சாகுபடியில மேலுரம் என்ன இடலாம் சொல்லுங்க அண்ணே?
ராஜா: மேலுரமாக விதைத்த 20, 40, 60 மற்றும் 90ஆம் நாளிலும் 10 சதவீதம் பூ தோன்றும் நிலையிலும் 26 கிலோ யூரியா இட வேண்டும். 90ஆம் நாளில் 19 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் உரத்தைக் கலந்து மேலுரமாக இட வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான ஐந்து கிலோ நெல் நுண்ணூட்டச் சத்தினை, விதைத்தவுடன் மேலாக இடும்பொழுது நெல் மணிகள் உறுதியாகவும், தரமாவும் இருப்பதுடன் மகசூல் அதிகரிக்கும்.
முத்து: நன்றி அண்ணே! நேரடி நெல் சாகுபடியில இந்த உர மேலாண்மை முறைகளை பின் பற்றிய உயர் விளைச்சல் பெற்றுப் பயன்பெறலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.