நெல் சாகுபடியில் கூண்டுப் புழு இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்ணுவதால் இலைகள் வெள்ளைநிறக் காகிதம் போல் தோன்றும். கத்திரிக்கோல் கொண்டு சரியான கோணத்தில் வெட்டப்பட்டது போல் இலைகள் வெட்டப்பட்டிருக்கும். இப்படி வெட்டப்பட்ட இலைகள் நீரில் மிதக்கும். இதனை கட்டுப்படுத்த 6 லிட்டர் மண்ணெண்ணெய்யில் 3 கிலோ மணலைக் கலந்து வயலில் இட வேண்டும். பிறகு வயலின் எதிரெதிர் வரப்புகளில் இருந்து பயிர்களின் மேல் படும்படி கயிற்றை இழுத்தால் கூண்டுப்புழு மற்றும் முட்டைகளும் நீரில் விழுந்து விடும். பிறகு, நீரை வடித்துவிடலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||