நெல் சாகுபடியில் எலிகளை கட்டுப்படுத்த வயல் வரப்புகளை சிறியதாக அமைப்பதன் மூலம் எலிகள் வலைகளை அமைக்காது. ஆரம்ப காலகட்டத்தில் பயிரிடத் தொடங்கும் முன்பு வயல் வரப்புகளில் காணப்படும் எலி வளைகளைத் தோண்டி அதில் ஒளிந்து கொண்டிருக்கும் எலிகளை அழிக்க வேண்டும். நெல் நடவு செய்த பின் வயலில் உயரமான டி வடிவ பறவை தாங்கி குச்சிகளை நட்டு ஆந்தை, கோட்டான்கள் ஆகியவற்றை அமரச்செய்து எலிகளை கட்டுப்படுத்தலாம். நெல் வயலில் தஞ்சாவூர் கிட்டி வைத்தும் எலிகளை கட்டுப்படுத்தலாம். பப்பாளி காய்களை கை படாமல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மாலை வேளையில் வயலில் ஆங்காங்கே வைக்கலாம். இதனை உண்ட எலிகளின் வாயில் புண் ஏற்பட்டு உணவு சாப்பிடாமல் இறந்து விடும். 1 கிலோ காய்ந்த மீன் தூள் மற்றும் 2 கிலோ சிமெண்ட் தூள் (1:2) என்ற அளவில் கலந்து பொட்டலம் கட்டி வயல் வரப்புகளில் ஆங்காங்கே வைக்க வேண்டும். இதனை செய்வதற்கு முந்தய நாள் காய்ந்த மீன் தூளை வயல் வரப்புகளில் இட்டு எலிகள் அவற்றை தின்கின்றனவா என்பதை உறுதிசெய்த பின்னரே இதனை செய்ய வேண்டும். எலி மருந்துகளான சிங்க் பாஸ்பைடு மற்றும் புரோமோடைலான் மருந்துகளை 1:49 என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு பங்கு மருந்து கலவைக்கு 49 சதம் உணவு பொருட்கள் அரிசி, பொறி அரிசி, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ராசாயன மருந்துகளை உண்டு இறந்த எலிகளை பறவைகள் சாப்பிட்டால் இறக்க நேரிடும். ஆதலால், ராசாயன மருந்துகளை உண்டு இறந்த எலிகளை சேகரித்து மண்ணில் குழி தோண்டி புதைக்க வேண்டும். மேலும் தானிய கிடங்குகளில் எலிகளை கட்டுப்படுத்த ஒட்டு பொறிகளை வைத்து கட்டுப்படுத்தலாம் என சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனர் முனைவர் K.சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.