சினை பிடிக்க தாமதமாகும் மாடுகளில் முதலில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குடற்புழு நீக்க மருந்து கொடுத்த நான்கு `நாட்களுக்கு பிறகு தினமும் இரண்டு கோழி முட்டை வீதம் ஓட்டுடன் 15 நாட்களுக்கு மாட்டிற்கு உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். மாட்டிற்கு இரண்டு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் அகத்க்திகீரை போன்றவை கொடுத்து வர மாடு பருவத்திற்கு வரும். முதல் பருவத்தினை விட்டு விட்டு அடுத்த சினை பருவத்திற்கு சினை ஊசி போட்டால் மாடு சினை பிடிக்கும். மேலும் டாஸ்மின் போர்ட் என்ற பவுடர் மருந்தினை தினமும் 2 ஸ்பூன் அளவிற்கு தீவனத்தில் கலந்து கொடுப்பதால் மாடு சினை பிடிப்பதில் பிரச்சனை குறைவாக இருக்கும், பால் உற்பத்தியும் அதிகரிக்கும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.