பருவத்திற்கேற்ற அதிக மகசூல் தரும் நெல் இரகங்கள்

நெல் சாகுபடியில் குறுகியகால ரகம், மத்திய கால ரகம் மற்றும் நீண்ட கால ரகம் என மூன்று ரகங்கள் உள்ளது.குறுகிய கால இரகங்கள் 90 முதல் 105 நாட்கள் வயதும், மத்திய கால ரகம் 120 முதல் 140 நாட்கள் வயதும் மற்றும் நீண்ட கால ரகம் 160 நாட்கள் வயதுடையது. தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் குறுவை, சம்பா மற்றும் தாளடி என மூன்று பருவங்களிலும் பயிர் செய்யப்படுகிறது. குறுவை சாகுபடிக்கு ஆடுதுறை 36 ஆடுதுறை 37, AST 16 போன்ற இரகங்கள் ஏற்றது. மத்திய கால இரகங்களுக்கு வெள்ளை பொன்னி, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, சம்பா மசூரி மற்றும் மாப்பிள்ளை சம்பா மசூரி போன்ற இரகங்கள் ஏற்றவை. பின்தங்கிய சம்பா பருவத்தில் சம்பா மசூரி மற்றும் மாப்பிள்ளை சம்பா மசூரி ரகங்களை பயிர் செய்ய வேண்டும். ஆரம்பகால சம்பா பயிருக்கு நீண்ட கால இரகங்களான CR1009 மற்றும் ஆடுதுறை 58 போன்ற ரகங்களை பயிர் செய்ய வேண்டும்.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட கேகேஎல்ஆர் -1 (KKLR-1) என்ற ரகம் வெள்ளத்தைத் தாங்கி வளரும் தன்மையும் அதிக மகசூலும் தரவல்லது.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags