ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு மேலுரமாக யூரியா 20 கிலோ மற்றும் பொட்டாஷ் 10 கிலோ போதுமானது. ஆனால் விவசாயிகள் அளவுக்கு அதிகமாக யூரியா உரத்தினை நெல் பயிருக்கு அளிப்பதால், நெல்லில் இலைச்சுருட்டுப்புழு தாக்குதல் பரவலாக அனைத்து கிராமங்களிலும் காணப்படுகிறது. சித்திரைக்கார் மற்றும் ஜோதி மட்டை இரகங்களில் தாக்குதல் குறைவாகவும், உயர் விளைச்சல் இரகங்களில் அதிகமாகவும் காணப்படுகிறது. மேலும் இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த வயல் வெளிகளில் புல் பூண்டுகளை அகற்றி, சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பூக்கும் பருவத்தில் அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்த்து பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்தை பயிரின் வளர்ச்சிக்கேற்ப பிரித்து இடவேண்டும். பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டும் போது ஏக்கருக்கு அசாடிராக்டின் 0.03% 400 மில்லி அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50% எஸ். பி. 400 கிராம் அல்லது குளோர்ஆன்ரனிலிபுரோல் 18.5% எஸ். சி. 60 மில்லி ஆகிய பூச்சிமருந்துகளில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவும். மறுபடியும் தாக்குதல் தொடர்ந்தால் 15 நாள் இடைவெளியில் மற்றொரு மருந்தினை மறுபடியும் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.