சம்பா நெல் சாகுபடியில் துத்தநாக சத்து குறைபாடு பற்றிய தகவல்

சம்பா நெல் சாகுபடியில் துத்தநாக சத்து பற்றாக்குறையால் நடவு செய்த இரண்டு முதல் நான்கு வாரங்களில் சமச்சீரற்ற பயிர் வளர்ச்சி காணப்படும். தூர்கள் அடர்த்தியின்றி தென்படும், இலைகள் வெளிறிப்போய் திடத்தன்மை இழந்து பழுப்பு நிறமாக காணப்படும். இதனால் நெல்மணிகள் உருவாக காலதாமதம் ஏற்படும், விளைச்சல் பாதிக்கும். இதனை சரி செய்வதற்கு ஏக்கருக்கு 500 கிராம் ஜிங்க்சல்பேட் மற்றும் ஒரு கிலோ யூரியா ஆகியவற்றை 100 லிட்டர் நீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இலைவழியாக தெளிக்க வேண்டும்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags