நெல் சாகுபடியில் ஆனைகொம்பன் ஈக்களின் புழுவானது, வளரும் நெற்பயிரின் தூர்களை தாக்கும், தாக்கப்பட்ட தூர்களிலிருந்து நெற்கதிர்கள் வராது. இவ்வகை தூர்கள் பார்ப்பதற்கு வெங்காய இலை போன்று காணப்படும். இதை கட்டுப்படுத்த புழு ஒட்டுண்ணியான பிளாஸ்டிகேஸ்டர் ஒரைசே வை பத்து சதுரமீட்டர்க்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தி ஆனைக்கொம்பனைக் கட்டுப்படுத்தலாம். அறுவடை செய்த பின் நிலத்தை உடனடியாக உழவு செய்ய வேண்டும். பூச்சி உண்ணக்கூடிய மாற்று பயிர்களை அகற்ற வேண்டும். தழைச்சத்திணை பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்தவும். புறஊதா விளக்கு பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் பொருளாதார சேதநிலையை தாண்டும் போது ஏக்கருக்கு 500 கிராம் பிப்ரோனில் 5% EC அல்லது 40 கிராம் தையோமித்தாசம் 25% WG அல்லது கார்போசல்பான்25% EC - 400 மி.லி மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம் என சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனர் முனைவர் K.சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.