நெல் சாகுபடியில் குலைநோய் தாக்குதல் நாற்றங்காலில் தொடங்கி அனைத்து வளர்ச்சிப் பருவங்களிலும் நெற்பயிரைத் தாக்குகிறது. இதன் அறிகுறிகளாக ஆரம்பத்தில் சிறு புள்ளிகளாக தோன்றி பின்னர் வெண்மை நிறத்தில் இருந்து சாம்பல் நிற முடைய மையப் பகுதியுடன் காய்ந்த பழுப்பு நிற ஓரங்களுடன் கண் வடிவில் காணப்படும். நோய் தீவிரமாகும் போது பயிர்கள் முழுவதும் எரிந்தது போல காணப்படும். இந்நோய் இலை, இலையின் உறை, தண்டு பகுதியில் உள்ள கணுக்கள் மீதும் காணப்படும். அதிக அளவு யூரியா இடுவதன் மூலமும், மேகம் சூழ்ந்த வான மூட்டம், விட்டு விட்டு தூறல், காற்றில் அதிக ஈரப்பதம், குறைவான இரவு நேர வெப்பநிலை இந்நோய் பரவ ஏற்ற நிலைகளாகும். இதனை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் அல்லது பேசில்லஸ் சப்டீலிஸ் 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். நடவு வயலில் நோய் தோன்றும் போது 15 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு ட்ரைசைக்லோசோல் 200 கிராம் அல்லது கார்பண்டசிம் 200 கிராம் அல்லது மெட்டாமினோஸ்ட்ரோபின் 20 மில்லி தெளிப்பதன் மூலம் குலை நோயை கட்டுப்படுத்தலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.