நெற்பயிரை தாக்கும் இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்துதல் 

தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு இலை சுருட்டு புழு தாக்குதல் அனைத்து இடங்களிலும் இருக்கும். இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்ததுபோல் காட்சியளிக்கும். இலைகள் நீள் வாட்டில் சுருண்டு புழுக்கள் அதனுள்ளே சுருண்டு இருந்துவிடும். இலை சுருட்டு புழு தாக்குதலில் தழைப்பருவத்தில் 10 சதவீகிதம் இலைச்சேதம் மற்றும் பூத்தல் பருவத்தில் 5 சதவிகிதம் கண்ணாடி இலைச்சேதமும் ஏற்பட்டால் பொருளாதார சேத நிலையாக கருதலாம். இந்நிலையில் ஏக்கருக்கு 20 எண்கள் பறவை குடில் அமைத்தால் இப்புழுவினை உணவாக உட்கொள்ளும் இதனால் பயிர் சேதத்தினை குறைக்கலாம். ஏக்கருக்கு டிரைக்கோகிரேம்மா கிலோனிஸ் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் செய்து 37, 44 மற்றும் 51 நாட்களில் மொத்தம் மூன்று முறை 5 சிசி (1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகளை 1 எக்டருக்கு 1 முறை என்ற அளவில் விடவேண்டும். வேப்பங்கொட்டைச் சாற்றினை 1 எக்டேருக்கு 5 சதவீதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதவிதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். மேலும் தாக்குதல் அதிகமாக ஏக்கருக்கு புளுபெண்டியமைடு 20 WG 50 கிராம் (அல்லது) கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 SP 400 கிராம் (அ) குளோரான்ட்டினிலிபுரோல் 18.5 SC 60 மி.லி மருந்தினை தெளித்தும், மறுபடியும் தாக்குதல் தொடர்ந்தால் 15 நாள் இடைவெளியில் மற்றொரு மருந்தினை மறுபடியும் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. 

 

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags