சம்பா நெல் சாகுபடியில் தற்சமயம் பெய்துள்ள மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் இருப்பதால் பயிர்கள் வாடிகாணப்படும். இதனைச் சரிசெய்ய உடனடியாக நீரை வடியசெய்துவிட்டு மேலுரமாக யூரியா 30 கிலோ, ஜிப்சம் 24 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 6 கிலோ ஆகியவற்றை முதல் நாள் கலந்து மறு நாள் இவற்றுடன் பொட்டாஷ் 15 கிலோ கலந்து இட வேண்டும். மேலும் உரமிட்ட ஒரு வாரம் கழித்து ஒரு ஏக்கருக்கு 300 கிராம் மோனோ அம்மோனியம் பாஸ்பேட், 300 கிராம் பொட்டாசியம் நைட்ரேட் என்ற மல்ட்டி- கே மற்றும் 100 கிராம் ஜிங்க் சல்பேட் ஆகிய உரத்துடன் 100 கிராம் நீரில் கரைத்த காதி சோப்பு ஆகியவற்றை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதால் பயிர் தெளிவு பெறும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.