நிலக்கடலை வயலில் களைகள் முளைப்பதற்கு முன்பு அல்லது நிலக்கடலை விதைத்த இரண்டு நாட்களில் ஈரமான மண்ணில் ஏக்கர் ஒன்றிற்கு 1.25 லிட்டர் பென்டி மெத்திலீன் களைக்கொல்லியை 200 லிட்டர் நீரில் கலந்து மண்ணில் தெளிப்பதன் மூலம் களைகளின் விதைகள் முளைப்பதை கட்டுப்படுத்தலாம். மூன்று அல்லது நான்கிலை பருவம் கொண்ட களைகளை கட்டுப்படுத்துவதற்கு இமாக்சிபயர் களைக்கொல்லியை பயன்படுத்தலாம். புல் மற்றும் அகன்ற இலை கொண்ட களைகளை கட்டுப்படுத்துவதற்கு குவாசிலிபாத் மீத்தைல் களைக்கொல்லியை பயன்படுத்தலாம். அல்லது களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் நிலக்கடலை செடி நடவு செய்த 35-45 நாட்களில் கைக்களை எடுத்து செடிகளுக்கு மண்ணை அணைத்து விடலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||