தற்போது பருவமழை பெய்வதால் அதன் மூலம் கிடைக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தி வயல் வரப்பு ஓரங்களில் உளுந்து சாகுபடி செய்யலாம். இதன் மூலம் கூடுதல் லாபம் பெற்று விவசாயிகள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். இதற்கு தேவையான வம்பன்-8 ரக உளுந்து விதைகள் 50 சத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையம்,நாகபட்டினம்,சிக்கல்,செம்பியன் மகாதேவி ஆகிய இடங்களில் விநியோகிக்க பட்டுவருகிறது. வயல் வரப்புகளில் களைச்செடிகள் வளராமல் தடுக்கப்படுகிறது. நெல் சாகுபடி காலங்களில் களைச்செடிகள் பூச்சிகளுக்கு மாற்று வாழ்விடமாக அமைகிறது. எனவே வரப்பில் உளுந்து சாகுபடி செய்யும்போது பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி பாதிக்கப்பட்டு தீமை செய்யும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு நன்மை செய்யும் பூச்சிகள் அதிகம் பெருக்கம் அடைகிறது. வரப்பு உளுந்து சாகுபடியின் போது வரப்புகளில் உள்ள களைச்செடிகளை அகற்றிவிட்டு ஏக்கருக்கு 2 கிலோ விதையை 30 சென்டி மீட்டர் இடைவெளியில் ஊன்ற வேண்டும். வரப்பு உளுந்து சாகுபடிக்கு என்று தனி கவனம் செலுத்த தேவையில்லை. இதற்கு தேவையான உளுந்து விதைகள் மற்றும் விதை நேர்த்திக்கு தேவையான ரைசோபியம், டிரைகோடர்மா போன்றவை நாகபட்டினம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் 50 சதவீத மானிய விலையில் கிடைக்கும். எனவே விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்து பயனடையமாறு நாகப்பட்டினம் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.