திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிப்பை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 51 அதிவிரைவுக் குழுக்கள் (RRT) அமைக்கப்பட்டு, களமிறக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வெள்ளம் பாதிக்கப்பட்ட கிராமங்கள் தோறும் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் இறந்த கால்நடைகளின் கணக்கெடுப்பு மற்றும் பிரேதப் பரிசோதனை செய்து நிவாரணம் பெறும் பொருட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் வெள்ளம் பாதித்த கிராமங்களில் நடைபெற்று வருகிறது. 21.12.2023 அன்று நாங்குநேரி, இராதாபுரம், களக்காடு, சேரன்மகாதேவி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலம் முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி போன்ற பணிகள் கால்நடை மருத்துவக்குழுவினரால் செயல்படுத்தப்படவுள்ளது. இம்முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர், திருநெல்வேலி அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.