நெற்பயிரில் நெல் பழ நோய் தாக்கப்பட்ட நெல் மணிகளின் மேல் மஞ்சள் நிற பந்து போல் பூஞ்சானம் காணப்படும். பந்து பெரிதாகி பச்சை நிறமாக மாறி, பின்பு கருப்பு நிறமாக போர்வை விரித்தது போல் தோன்றும். இந்நோய் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகம் காணப்படும். இந்த நோயானது விதை, காற்று, மண் மற்றும் நீர் மூலம் பரவக் கூடியது எனவே பாதிக்கப்பட்ட நெற்கதிர்களை பாதுகாப்பாக வயலை விட்டு அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும். மேலும் இந்த நோய் வராமல் தவிர்பதற்கு பயிரின் கதிர்விடும் பருவம், கண்ணாடி இலைப் பருவம் மற்றும் பால்பிடிக்கும் பருவங்களில் ஏக்கருக்கு 250 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது 200 கிராம் டைத்தேன் M 45 அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 50 கிராம் அல்லது ப்ரொபிகோனசோல் 200 மில்லி என்னும் பூஞ்சணக்கொல்லி மருந்துகளை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக்கட்டுப்படுத்தலாம். மேலும் தகவலுக்கு ரிலையன்ஸ் பவுண்டேசன் கட்டணமில்லா உதவி எண் 18004198800
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.