உளுந்து பயிரில் சாம்பல் நோய் தாக்குதல் காரணமாக இலைகளில் வெள்ளை நிற பொடி திட்டுக்கள் தோன்றும்.தீவிர தாக்குதலின் போது, இலையின் இருபுறத்திலும் வெள்ளை நிற சாம்பல் பொடி போன்ற வளர்ச்சி காணப்படும். நோயின் தாக்குதல் அதிகமாகும் போது, இலைப் பரப்பு முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி, வளர்ச்சி அடைவதற்கு முன்பே உதிர்ந்து விடும். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்ஷிம் அல்லது நனையும் கந்தகச் தூள் மருந்தினை 100 லிட்டர் நீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவும். மேலும் தகவலுக்கு ரிலையன்ஸ் பவுண்டேசன் கட்டணமில்லா உதவி எண் 18004198800 ஐ அழைக்கவும். நன்றி.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.