மழை காலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். மாட்டுகொட்டகைகளில் மின் சாதனங்களை கவனமுடன் கையாளவேண்டும். கன்றுகள் மற்றும் குட்டிகளுக்கு உலர்ந்த வைக்கோல் கொண்டு படுக்கை அமைக்க வேண்டும். நீர் தேங்காத உயர்வான இடத்தில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டும். கொட்டகை சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவுகளை உடன் அகற்ற வேண்டும். தீவனங்களில் பூஞ்சை பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்டு கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.