உளுந்து சாகுபடியில் களை செடிகளின் இரண்டு முதல் ஐந்து இலைப்பருவத்தில் களைக்கொல்லிகளை பயன் படுத்துவதன் மூலம் உளுந்து சாகுபடியில் களைச் செடி இரண்டு முதல் ஐந்து இலைகளை உடைய தருணத்தில் எப்படி கட்டுப்படுத்துவதுதலாம். அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு இமாசிதயாபயர் களைக்கொல்லி 250 மில்லி வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். புல் வகை மற்றும் கோரை களைகளை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு புரப்பி குயிசோலாபாப் களைக்கொல்லி 250 மில்லி வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். அகன்ற இலை மற்றும் புல் வகை களைகளை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு புரப்ப குயிசோபாப் களைக்கொல்லி 250 மில்லி மற்றும் இமாசிதயாபயர் களைக்கொல்லி 250 மில்லி வீதம் கலந்து ஏக்கருக்கு 10 முதல் 12 டேங்க் என்ற அளவில் மண்ணில் ஈரப்பதம் உள்ள போது களைக்கொல்லிக்கான நாசில் மூலம் தெளித்து களைகளை கட்டுப்படுத்தலாம். இந்த இரண்டு களைக்கொல்லிகளும் சேர்ந்த களைக்கொல்லி மருந்தாக இருப்பின் ஏக்கருக்கு 700 மில்லி என்ற அளவில் தெளித்து அனைத்து வகை களைகளையும் கட்டுப்படுத்தலாம். மேலும் தகவலுக்கு ரிலையன்ஸ் பவுண்டேசன் கட்டணமில்லா எண் 18004198800 ஐ அழைக்கவும். நன்றி
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||