உளுந்து பயிரில் வாடல் நோய் மற்றும் வேர் அழுகல் நோய் அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. நோயை தவிர்க்க ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்து , 24 மணிநேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். மேலும் ரைசோபியம் விதைநேர்த்தி செய்து விதைக்கலாம். தவறும் பட்சத்தில் 2 கிலோ ரைசோபியம் தொழு உரத்தில் மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தி கலந்து தெளித்துவிடலாம். இவ்வாறு செய்வதால் காற்றிலுள்ள நைட்ரஜனை (தழைச்சத்து) கிரகித்து மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தி உரச்செலவை குறைத்து நல்ல மகசூல் பெறலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||