உழுதுவிட்டு உளுந்து குறைந்த வயதுடைய - வம்பன் 8,9,10 ஆகிய ரகங்கள் மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து விதைப்பு செய்யலாம். அல்லது உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் வராமல் இருக்க, இமிடாகுளோபிரிட் 2 மில்லி ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். உளுந்து விதைக்க டிசம்பர் 15 வரை ஏற்ற பட்டம் ஆகும். ஏக்கருக்கு 6 - 8 கிலோ விதை விதைத்து பயிர் எண்ணிக்கை பராமரிப்பு செய்ய வேண்டும். அதாவது ஒரு சைக்கிள் டயருக்குள் 33 செடி இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒரு செடிக்கு 60-80 காய் பிடித்து ஏக்கருக்கு 450-500 கிலோ மகசூல் எடுக்கலாம். மேலும் நிலத்தில் அதிக அளவில் தழை சத்துக்களை ஊன்றி தரும். மேலும் தகவலுக்கு ரிலையன்ஸ் பவுண்டேசன் கட்டணமில்லா உதவி எண் 1800 419 8800 ஐ அழைக்கவும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.