முன்  பருவ  குறுவை நெல் சாகுபடியில்  பாசி வருவதற்கான கரணங்கள் மற்றும் கட்டுப்பாடு 

நடப்பு கோடை மற்றும் முன் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்த வயல்களில் அதிகபடியான டிஏபி உரத்தினை பயிருக்கு அளித்ததால்,  வயலில் பச்சை பாசி படர்ந்து பயிர் வளர்ச்சி குன்றியும், சில இடங்களில் நெற்பயிர்கள் காய்ந்த நிலையிலும் காணப்படும். இதற்கான காரணங்களான நீரில் உள்ள பாஸ்பரஸ் உப்பு, பச்சைப் பாசியினுடைய வளர்ச்சியை அதிகமாக ஊக்குவிப்பதன் காரணமாக பச்சைப் பாசி வயலின் மீது  ஒரு உறைபோல படர்ந்து பயிருக்கு கிடைக்கக்கூடிய  சூரிய ஒளி, பிராணவாயு மற்றும் பயிரின் வேர் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்களை தடை செய்து நெற்பயிரின் வளர்ச்சி குன்றியும், சில இடங்களில் பயிர் காய்ந்தும் காணப்படுகிறது. இதிலிருந்து நெற்பயிரை பாதுகாக்க டிஏபி உரம் இடுதலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  யூரியா மற்றும் பொட்டாஸ் உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பசுந்தாள் உர பயிர்களாக சணப்பு, தக்கைப்பூண்டு மற்றும்  கொளுஞ்சி/காவாலை ஆகிய ஏதேனும் ஒரு பசுந்தாளுரப் பயிரினை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுதல் வேண்டும். மேலும்,  வேளாண்மைத் துறையினால் பரிந்துரைக்கப்படும் திரவ நுண்ணுயிர் உரங்களான பொட்டாக்ஷ் பாக்டீரியா, பாஸ்போ பாக்டீரியா, துத்தநாக சத்தைக் கரைத்துக் கொடுக்கும் பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும். மேலும் பச்சைப்பாசியை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 2 கிலோ நன்கு தூளாக்கப்பட்ட காப்பர் சல்பேட்டுடன் 25 கிலோ மணல் சேர்த்து வயலில் சீராக தூவ வேண்டும்.  வயலை காயவிடாமல் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags