வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்.ஜலசந்தி போன்ற பகுதியில் ஆழ்கடலிலுள்ள மீன்கள் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, இனப்பெருக்கம் செய்து மீன்வளம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15 தொடங்கி ஜூன் 14 மாதம் வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த கால இடைவெளியில் தான் ஆழ்கடலிலுள்ள மீன்கள் பாறையின் இடுக்குகளில் முட்டையிட்டு, குஞ்சு பொறித்து மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். எனவே இந்த தடைக்காலத்தில் விசைபடகு மூலமாக ஆழ்கடல் பகுதியில் கண்டிப்பாக மீன் பிடிக்கக்கூடாது. அதே சமயத்தில் வல்லம், கட்டுமரம், பைபர் படகு மூலமாக மீனவர்கள் கரையோரத்தில் மீன்பிடிக்க அனுமதிக்கப் படுகிறார்கள். இந்த நேரத்தில் விசை படகுகள் ஆழ்கடலில் சென்றால் படகு மற்றும் மீன்பிடி வலைகளினால் மீன் குஞ்சுகள் அடிபட்டு மீன்வளம் குறையும் நிலை ஏற்படும். இதனால் தான் மீனவர்களும் மீன்பிடித் தடைக்காலத்தை தவறாது கடைப்பிடித்து இந்த காலத்தில் தங்களுடைய படகுகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வது, மீன்வலைகளை சரி செய்வது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபடலாம். மேலும் தகவலுக்கு ரிலையன்ஸ் பவுண்டேசன் கட்டணமில்லா எண் 18004198800 ஐ அழைக்கவும். நன்றி.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.