இரக தேர்வு என்பது நெல் சாகுபடியில் ரொம்ப முக்கியமான ஒரு அம்சமாகும். இப்ப வரக்கூடிய சீசன்ன்னு பார்த்தீங்கன்னா குறுவை பட்டம்ன்னு சொல்றதுதான். வரக்கூடிய குறுவை பட்டம் நமக்கு ஜீன்-ஜூலையில் ஆரம்பம்மாகிறது. இந்த ஜீன்-ஜூலையில் போர்வல் வசதியுள்ளவர்கள் மற்றும் காவிரி தண்ணீர் திறப்பை பொறுத்து டெல்டா பகுதிகளிலும் பண்ணுவாங்க. இந்த குறுவை பட்டத்திற்கு ஏற்ற இரகங்கள் அப்படினா குறுகிய கால இரகங்கள் தான் 110-120 நாட்களுள்ள வயதான இரகங்கள் தான் நமக்கு சாகுபடிக்கு எடுக்க படும். அப்படி என்னென்ன இரகங்கள் இருக்கு, அது ஆடுதுறை இரகங்கள் ஏடிடீ 36, ஏடிடீ 37, ஏடிடீ 42, ஏடிடீ 43, ஏடிடீ 45, ஏடிடீ 47, அம்பை 16 என்கிற ஏஎஸ்டி 16, ஏஎஸ்டி 18, திருச்சி 2 அப்புறம் கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் புதிதாக வெளி வந்துள்ள இரகங்களான ஏடிடீ 53, ஏடிடீ 56, ஏடிடீ 57 அதன் பின் கோயம்புத்தூர் இரகங்கள் கோ-51, கோ-54, கோ-55 இதில் ஒரு சிறப்பு இரகம் ஏடிடீ 48 இது 100 நாட்கள் குள்ளேயே அறுவடைக்கு வரக்கூடியது. இந்த இரகங்களில் ஏதேனும் ஒரு இரகத்தினை தேர்வு செய்யலாம் . இதில் ஏடிடீ 43, ஏடிடீ 45 சன்ன இரகங்கள் மேலும் சந்தை படுத்துவதற்கு ஏற்றது. மற்றப்படி பொன்னி இரங்களான வெள்ள பொன்னி, ஆந்திரா பொன்னி, டீலக்ஸ் பொன்னி, NLR மற்றும் JCL போன்ற ரகங்கள் பின் சம்பாவிற்கு ஏற்றது.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.