200 க்கும் அதிகமான ரக ஜெல்லி மீன்கள் கடலில் காணப்படுகின்றன. ஜெல்லி மீன்களில் காணப்படும் சாட்டை போன்ற உணரலைகள் கோடிக்கணக்கான நுண்ணிய கொட்டும் செல்களை கொண்டுள்ளன. அவைகள் தான் நம் உடலில் பட்டவுடன் எரிச்சல் ஏற்பட காரணமாக இருக்கிறது. ஒரு ஜெல்லி மீன் உயிருடன் இருந்தாலோ அல்லது இறந்து கடற்கரையில் கிடந்தாலும் அதன் கொட்டும் தன்மை குறைவதில்லை; ஆதலால் எந்த ஒரு ஜெல்லி மீனையும் வெறுங்கைகளால் எடுப்பது கூடாது. ஏதாவது ஒரு சூழ்நிலையில் நீங்கள் ஜெல்லி மீன் உணரலைகள் பட்டு எரிச்சல் ஏற்பட்டால் அந்த இடத்தில் கடைகளில் கிடைக்கும் வினிகரை ஒரு நிமிடங்களுக்கு கடிபட்ட இடத்தில் ஊற்ற வேண்டும். நல்ல தண்ணீர் கொண்டு அந்த இடத்தை தேய்த்து விடுவதோ கூடாது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளில் எப்பொழுதும் வினிகர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும் அதுவும் குறிப்பாக வெயில் காலங்களில் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் ஜெல்லி மீன்கள் அதிகம் காணப்படும் நேரங்களாகும். ஆதலால் அந்த சமயத்தில் மீனவர்கள் வினிகரை கொண்டு முதலுதவி செய்து கொள்ளலாம்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.