ஆரம்ப காலத்தில் இருந்து தழைச்சத்து மற்றும் ஜிங்க் சத்து போதிய அளவு இல்லாதால் வரக்கூடியது இந்த பிரச்சனை. நடவு நட்டு 25 ல இருந்து 30 வது நாள் ஒரு ஏக்கருக்கு 120 மில்லி 39.5 சதம் ஜிங்க்-யை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழியாக தெளிக்கலாம் அல்லது 10 கிலோ யூரியாவுடன் 120 மில்லி 39.5 சதம் ஜிங்க்-யை கலந்து போடலாம். அல்லது 4 கிலோ யூரியாவை 20 லிட்டர் நீரில் கலந்து வைக்க வேண்டும். பின்பு 2 கிலோ ஜிங்க்சல்பேட் இதை 20 லிட்டர் நீரில் கலந்து வைக்க மறுநாள் காலை தெளிந்த இரு கரைசலையும் 160 லிட்டர் தண்ணீரில் கலந்து பேட்டரி கை தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||