நடவு செய்து 20 நாட்களில் பயிர் வளர்ச்சி இல்லை. திட்டுதிட்டாக கறுகியுள்ளது என்றால் போர் தண்ணீரில் உப்பாக இருக்கலாம். இதிலிருந்து பயிரை சரி செய்ய வயலில் நீரை விடுவதற்கு முன் அதில் தேங்காய் மட்டையை உரித்து மடைக்கு முன்னால் போட்டு விட வேண்டும். அல்லது போர் தண்ணீர் விழும் தொட்டியில் இரண்டு சணல் சாக்குகளில் நூறு தேங்காய் மட்டையை உரித்து சாக்குகளில் கட்டி அந்த தொட்டில் போட்டு விட வேண்டும் அவ்வாறு செய்தால் உப்பு தன்மை குறைந்து தெளிந்து நீராக இருக்கும். ஆகையால் போர் தண்ணீரில் பயிர் செய்வதை தவிர்த்து வயல்களின் ஓரத்தில் பண்ணை குட்டை அமைத்து மழை நீரை சேமித்து அதை வடிகட்டி பயிர் செய்ய வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.